மஞ்சள் நம் சமையலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பொதுவாக பாலில் மஞ்சள் பொடியை சேர்த்து குடிப்பது நமது பழக்கமாக உள்ளது. இப்படி செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்ப்பதோடு, உடலில் சேர்ந்துள்ள சளி, கபம் ஆகியவையும் குணமாகும். பாலில் மஞ்சள் சேர்ப்பது மட்டுமல்ல, தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கு தெரியாது.
இதுவரை மஞ்சள் தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள், இனி அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதில் உள்ள பல வித அற்புதமான நன்மைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மஞ்சள் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும்.
மஞ்சள் தண்ணீர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலின் தீவிரமான பல பிரச்சனைகளை அகற்றுவதில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சருமத்தின் அழகை இது மேம்படுத்துகிறது. மஞ்சள் தண்ணீர் அருந்துவதுநோய் எதிர்ப்பு சக்தி-யை வலுப்படுத்தும். பல்வேறு நோய்களை எதிர்த்து போராடத் தேவையான திறனை இது நம் உடலுக்கு அளிக்கின்றது.
மஞ்சள் தண்ணீர்: உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது
மஞ்சள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து பருகி வந்தால், உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மஞ்சளில் இருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் பல பிரச்சனைகளை குறைக்கின்றன.
மஞ்சள் தண்ணீர்: கீல்வாதத்திலும் இது நன்மை பயக்கும்
பொதுவாக உடலில் காயங்கள் ஏற்பட்டால், அவற்றை விரைவாக குணப்படுத்த மஞ்சள் தண்ணீர் உதவியாக இருக்கும். காயத்தை ஆற்றுவதில் மஞ்சள் நீர் உங்களுக்கு உதவும்.கீல்வாதத்தால் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைப்பதிலும் மஞ்சள் நீர் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment