2022 - ஆரோக்கியம்

Friday, 3 June 2022

வெண்டக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா.?

June 03, 2022 0
வெண்டக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா.?

வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.

வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது. வெண்டக்காய் சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது.

வெண்டைக்காய் நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும். வெண்டக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.

சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டக்காய் ஊற வைத்த நீர அருந்துவது நல்லது. பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தல் இருமல், நீர்கடுப்பு சரியாகும். வெண்டக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் இரத்த ஓட்டம் தூண்டப்படும்.

Monday, 28 March 2022

தினமும் தயிரை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா.!!

March 28, 2022 0
தினமும் தயிரை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா.!!

 தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது.

தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும். தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.

பாலை தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உணவுடன் சேர்த்து தயிர் சாப்பிடும் போது 97% உணவானது உடனே ஜீரணிக்கப்படும்.

கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும்.

சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் உள்ள கால்சியம் சத்தானது இதனை சரி செய்கிறது.

Sunday, 27 March 2022

மஞ்சள் தண்ணீரின் மகத்தான நன்மைகள்: இன்றே பருக துவங்குங்கள்.!

March 27, 2022 0
மஞ்சள் தண்ணீரின் மகத்தான நன்மைகள்: இன்றே பருக துவங்குங்கள்.!

மஞ்சள் நம் சமையலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.




பொதுவாக பாலில் மஞ்சள் பொடியை சேர்த்து குடிப்பது நமது பழக்கமாக உள்ளது. இப்படி செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்ப்பதோடு, உடலில் சேர்ந்துள்ள சளி, கபம் ஆகியவையும் குணமாகும். பாலில் மஞ்சள் சேர்ப்பது மட்டுமல்ல, தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கு தெரியாது.

இதுவரை மஞ்சள் தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள், இனி அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதில் உள்ள பல வித அற்புதமான நன்மைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மஞ்சள் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும்.

மஞ்சள் தண்ணீர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலின் தீவிரமான பல பிரச்சனைகளை அகற்றுவதில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சருமத்தின் அழகை இது மேம்படுத்துகிறது. மஞ்சள் தண்ணீர் அருந்துவதுநோய் எதிர்ப்பு சக்தி-யை வலுப்படுத்தும். பல்வேறு நோய்களை எதிர்த்து போராடத் தேவையான திறனை இது நம் உடலுக்கு அளிக்கின்றது.

மஞ்சள் தண்ணீர்: உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது

மஞ்சள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து பருகி வந்தால், உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மஞ்சளில் இருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் பல பிரச்சனைகளை குறைக்கின்றன.

மஞ்சள் தண்ணீர்: கீல்வாதத்திலும் இது நன்மை பயக்கும்

பொதுவாக உடலில் காயங்கள் ஏற்பட்டால், அவற்றை விரைவாக குணப்படுத்த மஞ்சள் தண்ணீர் உதவியாக இருக்கும். காயத்தை ஆற்றுவதில் மஞ்சள் நீர் உங்களுக்கு உதவும்.கீல்வாதத்தால் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைப்பதிலும் மஞ்சள் நீர் பயனுள்ளதாக இருக்கும்.

சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

March 27, 2022 0
சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, ​​அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதனால் உணவு உண்ட பிறகு குளிக்க கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

உணவுக்குப் பிறகு குளிப்பது உங்கள் உடலின் இயற்கையான செரிமானக் காலக்கெடுவைத் தடுக்கிறது. மேலும் செரிமானத்திற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்கு வயிற்றில் நல்ல அளவு இரத்த ஓட்டம் முக்கியம். நீங்கள் உணவு உண்ணும் போது, ​​உங்கள் செரிமான உறுப்புகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவதால், உங்கள் உடலின் வெப்பநிலை சற்று உயரும். ஆனால் உணவு உண்ட உடனேயே குளித்தால், ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும். செரிமான செயல்முறையை நோக்கி செலுத்தப்பட்ட இரத்தம் மற்ற உடல் பாகங்களுக்குப் பாயத் தொடங்குகிறது, இதனால் செரிமானம் தாமதமாகிறது.

இந்த தவறைச் செய்வது அசௌகரியம் மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கு வழிவகுக்கும். மேலும் நீங்கள் சூடான குளியல் எடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், சூடான குளியல் உங்கள் உடல் வெப்பநிலையை மட்டுமல்ல, உங்கள் இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சாப்பிட்ட பிறகு குளித்தால் நீங்கள் மிகவும் மந்தமாக உணர்வீர்கள்.

நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சரியான வழிமுறைகள்

சாப்பிடுவதற்கு முன்:

1. தண்ணீர் குடிக்கவும் அதிகப்படியான உணவு உண்பதை தடுக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். சாப்பிட்ட பிறகு செரிமானம் ஆகவும் இது உதவும்.

2. வசதியான ஆடைகளை அணியுங்கள் உணவு உண்ணும் போது நீங்கள் வசதியான ஆடைகளை அணிய வேண்டும், ஏனெனில் இறுக்கமான ஆடைகள் வயிற்றில் அழுத்தத்தை உண்டாக்கும், மேலும் உணவு நெஞ்சிலே இருந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

3. சுகாதாரத்தை பராமரிக்கவும் நீங்கள் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் கைகளின் சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். எனவே உணவில் ஈடுபடும் முன் உங்கள் கைகளை சரியாகக் கழுவுங்கள்.

சாப்பிட்ட பிறகு:

1. உடனடியாக பல் துலக்க வேண்டாம் உணவு உண்டவுடன் உடனடியாக பல் துலக்குவதைத் தவிர்க்கவும். குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருங்கள், ஏனெனில் சாப்பிட்ட உடனேயே பல் துலக்குவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

2. எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்ய திட்டமிட்டால் காத்திருங்கள். உங்கள் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் இடையே குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

3. நடந்து செல்லுங்கள் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக அல்லது சாப்பிட்ட உடனேயே படுக்கையில் படுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒரு சிறிய நடைப்பயிற்சி செல்லுங்கள். நீங்கள் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நடந்து வெளியே செல்லலாம். இது செரிமான செயல்முறையைத் தூண்ட உதவும்

4. உடனே தூங்க வேண்டாம் சாப்பிட்ட உடனேயே தூங்குவது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் உங்கள் உணவுக்குழாயின் புறணிக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் படுப்பதற்கு முன் உணவை ஜீரணிக்க உங்கள் உடலுக்கு சிறிது நேரம் கொடுங்கள். செரிமான செயல்முறை தடைபட்டால், உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

5. உணவுக்குப் பின் குளிப்பதைத் தவிர்க்கவும் குளிக்க திட்டமிட்டால், சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் காத்திருக்கவும். மேலும் அன்று நீங்கள் வயிறு நிறைய உணவு சாப்பிட்டுருக்கிறீர்கள் என்றால் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

எனவே, உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இந்த தவறுகளைச் செய்யாதீர்கள் மற்றும் அளவோடு சாப்பிடுங்கள்.

பாசிப்பருப்பு ஒரு பொக்கிஷம்: பல உடல் பிரச்சனைகளின் ஒரே தீர்வு.!

March 27, 2022 0
பாசிப்பருப்பு ஒரு பொக்கிஷம்: பல உடல் பிரச்சனைகளின் ஒரே தீர்வு.!

 

அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள்.

பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். பாசிப்பருப்பால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


பாசிப்பருப்பை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்


பாசிப்பருப்பை உட்கொள்வது மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பருப்பை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

பாசிப்பருப்பின் பயன்கள்: 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும்.


பாசிப்பருப்பின் பயன்கள்: ஜீரண மண்டலத்தை வலிமையாக்கும்:

ஜீரண மண்டலத்தை வலிமையாக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கோடை காலத்தில் இதை உட்கொண்டால், இது வயிற்றில் உள்ள சூட்டை நீக்க உதவுகிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


பாசிப்பருப்பின் பயன்கள்: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்:

சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள அனைத்து குணங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பாசிப்பருப்பின் பயன்கள்: எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்:

எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.

Monday, 21 March 2022

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஆபத்து: இவற்றில் கவனம் தேவை.!

March 21, 2022 0
கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஆபத்து: இவற்றில் கவனம் தேவை.!

 கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சனையாக இருந்து வருகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், சிலவற்றை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதற்கான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். சில அன்றாட உணவுப் பழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்

1. கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்க்கவும்

இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், சில இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு (சேசுரேடட் ஃபேட்) உள்ளது. அதிக அளவில் இதை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.

2. இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்

இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதால், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலும் குறைந்து கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு பதிலாக இனிப்பு பழங்களை சாப்பிடுங்கள்.

3. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

உணவில் நிறைவுற்ற கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். உங்கள் எடை தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தால், அது இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

4. இந்த விஷயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பீன்ஸ், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு கரையக்கூடிய நார்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

5. ஆரோக்கியமான ஃபேட் தேவை

உணவில் நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் உங்கள் தினசரி உணவில் மற்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும். உணவில் உலர் பழங்கள், நட்ஸ், வெண்ணெய் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. காய்கறிகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

உணவில் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

March 21, 2022 0
முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளைதான் சாப்பிட வேண்டும். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிடுவதில் பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக் குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம்.

அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்களும், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான் சாப்பிடவேண்டும்.

இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.